மன்னாருக்கு வடக்காகவுள்ள இலங்கை கடற்பகுதியில் சட்டவிரோதமாகக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது, 2 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் கரைக்கு அழைத்துவரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கிளிநொச்சி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.