தெற்கு மெக்சிகோவின் டபாஸ்கோ பேருந்து விபத்தில் 41 பேர் பலி!

0
8

தெற்கு மெக்சிகோவின் டபாஸ்கோ பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.48 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து பாரவூர்தியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .

38 பயணிகளும் இரண்டு வாகனங்களின் சாரதிகளும் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.விபத்தைத் தொடர்ந்து பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதுவரையில் 18 மண்டை ஓடுகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.