க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் அழகான கடற்கரையை உருவாக்கும் தேசிய திட்டம் இன்று (09) ஆரம்பமாகிறது. ஆரம்ப விழா இன்று மட்டக்குளிய – காக்காத்தீவு கடற்கரை பூங்காவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெறுகிறது
‘ஒரு அழகான கடற்கரை – ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் செயற்படுத்தப்படும் இந்த தேசிய திட்டத்தில் நாட்டை சூழவுள்ள 1,740 கிலோமீட்டர் தூரம் கடற்கரையைச் சுத்தம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்கு மற்றும் தெற்கு கடற்கரைகள் உள்ளடங்களாக 51 இடங்களில் கடற்கரை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது .