தெருநாய் கடித்து 9 வயது சிறுவன் பலி!

0
7

இந்தியாவின் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் தெருநாய் கடித்து 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.5 நாட்களுக்கு முன்னர் பாடசாலை செல்லும் போது அச்சிறுவனை தெரு நாய் கடித்துள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பான மாணவன் யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.

நேற்றைய தினம் திடீரென மூச்சித்திணறல் ஏற்படவே வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது தெருநாய் கடித்தது தெரியவந்துள்ளது.உயர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த மாணவன் உயிரிழந்தள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.