வலுக்கட்டாயமாக இளைஞனை கடத்தி சென்று பணமோசடி செய்த சம்பவம் – நால்வர் கைது!

0
9

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றுஇ கொள்ளையர்களின் வங்கிக்கணக்கிற்கு 8 மில்லியன் ரூபாவை மாற்றிய சம்பவம் தொடர்பில் ஒரு பெண் உட்பட நான்கு சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் அரியகுளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாட்டு வேளை வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருந்த வேளையில் ​ஒரு பெண் அவரிடம் 8 மில்லியன் ரூபாய் கொடுத்தால் இரண்டு வாரங்களில் ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார். குறித்த இளைஞன் தன்னிடம் பணம் இருப்பதாகக் கூறினாலும் அதை அப்பெண்ணுக்குக் கொடுக்க மறுத்துள்ளார்.

சில நாட்களுக்குப் பிறகுஇ குறித்த பெண் உட்பட மூவர் இணைந்து மகிழுந்து ஒன்றில் இளைஞனை கடத்திச் சென்று அவரது வங்கிக் கணக்கிலிருந்த 8 மில்லியன் ரூபாவை வலுக்கட்டாயமாக அந்தப் பெண்ணின் வங்கி கணக்கிற்கு மாற்றியதாகக் கூறப்படுகிறது. இளைஞனிடம் பணத்தை கொள்ளையடித்தன் பின்னர் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் அவரை இவிட்டுவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையில் முறைப்பாடளிக்கப்பட்டதை தொடர்ந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இளைஞனை கடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட மகிழுந்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபர்கள் நால்வரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.