குருணாகலை பேருந்து விபத்துக்குக் காரணம் வெளியானது!

0
10

குருணாகலை, தொரயாய பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது .இந்த பேருந்துஇ மணிக்கு சுமார் 90 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கதுருவெலவிலிருந்து தோராயவிற்கு 2 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் இந்த பேருந்து வந்து சேர்ந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சி.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்தார்.விபத்தில் காயமடைந்தவர்களில் ஐந்து பேர் இன்னும் குருநாகல் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குருணாகலை தொரயாய பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்து ஒன்று மற்றொரு தனியார் பேருந்துடன் மோதியதில் நேற்று (10) காலை இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தின் நடத்துனர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் ஓட்டுநர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.