ஒன்றரைக் கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

0
9

கந்தானை பகுதியில் சுமார் ஒன்றரைக் கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் ஒரு கிலோகிராம் எடையுள்ள இந்த போதைப்பொருளை மகிழுந்து ஒன்றில் எடுத்துச் சென்ற வேளையில்இ கந்தானை தொடருந்து நிலைய வீதியில் வைத்துக் குறித்த நபர் நேற்று கைதாகியுள்ளார்.

மேல் மாகாண தெற்கு குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பொரளையைச் சேர்ந்த 28 வயதுடைய குறித்த நபர் போதைப்பொருளுடன் மேலதிக விசாரணைக்காக கந்தானை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த போதைப்பொருளானது டுபாயில் தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படும் போதைப்பொருள் வர்த்தகரான மோதர நிபுணவுக்குச் சொந்தமானது என நம்பப்படுகிறது.