முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒருங்கிணைப்புச் செயலாளராகப் பணியாற்றிய ஒருவரால் நாடாளுமன்ற சந்திக்கு அருகில் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் ஒன்றை வலான மத்திய ஊழல் தடுப்புப் படையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தின் அதே பதிவு எண்ணைக் கொண்ட இரண்டு வாகனங்களை காவல்துறையினர் ஏற்கனவே கண்டுபிடித்தனர்.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் ஒன்று போலி இலக்கத் தகடுகளுடன் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக வலான மத்திய ஊழல் தடுப்பு படைக்குத் தகவல் கிடைத்தது.இந்த ஜீப் பின்னர் பெலவத்தையில் உள்ள ஜப்பானிய நட்புறவு வீதியில் உள்ள நாடாளுமன்ற சந்திக்கு அருகில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.மேலும் விசாரணையில் இந்த ஜீப்பின் பாகங்கள் சூட்சுமமான முறையில் ஒரு கொள்கலனில் அடைக்கப்பட்டுக் கொண்டு வரப்பட்டிருப்பது தெரியவந்தது.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று போலி ஆவணங்களைத் தயாரித்து கணினித் தரவுகளை மாற்றியமைத்திருப்பதும் தெரியவந்தது.2018 ஆம் ஆண்டு காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட வாகனத்தின் அதே பதிவு இலக்கத்தைக் கொண்ட மின்சார காரை வலானா மத்திய ஊழல் தடுப்புப் படை கண்டுபிடித்தது.2019 ஆம் ஆண்டில் அதே இலக்கத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு மிட்சுபிஷி மான்டெரோ ஜீப்பையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
நாடாளுமன்ற சந்திக்கு அருகில் மீட்கப்பட்ட வாகனம் தொடர்பாக 52 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒருங்கிணைப்பு செயலாளராக பணியாற்றிய குசும் துஷார ஹேமச்சந்திர என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதேவேளை தெஹிவளை மற்றும் களனி-தலுகம பகுதிகளில் ஒரே பதிவு இலக்கத்தைக் கொண்ட மேலும் இரண்டு மகிழுந்துகள் மத்திய ஊழல் தடுப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முதல் மகிழுந்து தெஹிவளை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது இரண்டாவது மகிழுந்து தலுகமவின் முதியன்சே வத்த பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது.இரண்டு வாகனங்களில் எது போலியானது என்பதைக் கண்டறியவும் அரசாங்க பகுப்பாய்வாளரால் பரிசோதனை செய்வதற்கான உத்தரவைப் பெறவும் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.