வெலிகம-பெலேன தொடருந்து கடவையில் இன்று (14) காலை வேன் ஒன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது . விபத்து ஏற்பட்ட நேரத்தில் வேனின் சாரதி மட்டுமே இருந்ததாகவும் அவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் வேனுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட நேரத்தில் தொடருந்து கடவையில் நிறுவப்பட்ட எச்சரிக்கை மணி மற்றும் ஒளி சமிக்ஞை செயலிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.