மியன்மாரில் இணையக் குற்ற முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எஞ்சிய இலங்கையர்களையும் மீட்டு நாட்டுக்கு விரைவில் அழைத்து வருவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண ஹேமசந்திர தெரிவித்தார்.
முன்னதாக குறித்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்டோர் விடுக்கப்பட்ட அதேவேளை தற்போது 4 பேர் மாத்திரமே முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 3 ஆம் திகதி ஒருவரும் நேற்றைய தினம் 13 பேருமாக 14 இலங்கையர்கள் இந்த மாதத்தில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இவர்களை விடுவிக்கும் முயற்சியில் பங்களிப்பை வழங்கியமைக்காக தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சருக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி ஊடாக நன்றி தெரிவித்ததாகவும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதியமைச்சர் அருண ஹேமசந்திர எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.