ஆர்ஜன்டினா ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர எதிர்க் கட்சிகள் தீர்மானம்!

0
14

ஆர்ஜன்டினாவில் ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஆர்ஜன்டினாவின் ஜனாதிபதி ஜேவியர் மிலே தலைமையிலான வலதுசாரி லிபர்டி அட்வான்சஸ் கூட்டணி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது.அந்த நாட்டு சட்டத்தரணிகள் பலர் ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஜனாதிபதியின் அண்மைக்கால நடவடிக்கைகள் முதலீட்டாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.இதனிடையே இந்த ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தன்னை விடுவிக்குமாறும், தான் நல்லெண்ணத்துடன் செயற்பட்டதாகவும் ஆர்ஜன்டினாவின் ஜனாதிபதி ஜேவியர் மிலே தெரிவித்துள்ளார்.