தம்புத்தேகம மற்றும் செனரத்கம தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று(19) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தம்புத்தேகம காவல்துறையினர் தெரிவித்தனர்.கொழும்பிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த தொடருந்து மோதியதில் படுகாயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.எனினும் சிகிச்சை பலனின்றி இந்த நபர் உயிரிழந்துள்ளார்.சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்