இஸ்ரேல் -ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் குறித்த முதல் கட்ட ஒப்பந்தம் மார்ச் மாத தொடக்கத்தில் நிறைவடைகின்றது. இரு தரப்பும் இன்னும் இரண்டாவது போர் நிறுத்தம் பற்றி இன்னும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இந்நிலையில் ஹமாஸ் உடன் இரண்டாவது கட்ட போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்குவதற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்கு நெருங்கிய மற்றும் நம்பிக்கைக்குரியவரை நியமித்துள்ளதாக இஸ்ரேல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி புதிய ஆலோசகராக ரான் டெர்மர் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் பிறந்த இவர் அமெரிக்காவிற்கான இஸ்ரேல் தூதராக பணியாற்றியவர். ட்ரம்ப் மற்றும் வெள்ளை மாளிகையுடன் வலுவான உறவுகளைக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.