மித்தெனிய துப்பாக்கிச் சூடு சம்பவம் – காவல்துறை கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது!

0
11

மித்தெனிய, கல்பொத்தயாய பகுதியில் தந்தை மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் காவல்துறை கான்ஸ்டபிள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டபோது இதனைத் தெரிவித்தார். கடந்த 18 ஆம் திகதி இரவு மித்தெனிய பகுதியில் இரவு உணவு கொண்டு வரச் சென்ற தந்தை உட்பட 2 பிள்ளைகள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.