ஹொங்கொங்கின் மிகப் பெரிய எதிர்க்கட்சியாக இருந்த ஜனநாயக கட்சியை கலைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 31 ஆண்டு கால வரலாற்றை கொண்ட ஜனநாயக கட்சியை கலைப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அந்த கட்சியின் தலைவர் லோ கின்-ஹெய் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டங்களை தொடர்ந்து சீனா மேற்கொண்ட நடவடிக்கைகளால் ஜனநாயக கட்சியின் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளன. அதேநேரம் 2021ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் நிறைவேற்றப்பட்ட சட்டமொன்றுக்கு அமையஇ சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமானவர்கள் என கருதப்படும் தரப்பினர் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்களாக வர முடியும் என்ற நிலை உருவானது.
அத்துடன் இந்த சட்டம் ஜனநாயக கட்சி தேர்தலில் போட்டியிடுவதையும் தடுத்தது. இந்தநிலையிலேயே குறித்த கட்சியை கலைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.