கனடாவில் விமான விபத்து – 3 பேர் படுகாயம்!

0
8

கனடாவின் டொரன்டோ விமான நிலையத்தில்  விமானமொன்று தரையிறங்கிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை குறித்த விமானத்தில் 4 பணியாளர்கள் உள்பட 80 பயணிகள் பயணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், விபத்துக்குள்ளான விமானத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தி ஓடுபாதையை மீண்டும் செயற்பாட்டுக்கு கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது.

கனடாவில் பல்வேறு பகுதிகளில் தற்போது கடும் பனிப்புயல் வீசி வருவதால்  விமானம் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.