சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.பெப்ரவரி 13 முதல் 19 வரை கொக்கடிஇ நந்திக்கடல்,முல்லைத்தீவு, ஆனவாசல்,சின்னபாடு மற்றும் கடைக்காடு ஆகிய கடற்பகுதிகளிலும் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12 மீன்பிடி படகுகள், ஒரு மோட்டார் சைக்கிள், 156 சட்டவிரோத மீன்பிடி வலைகள், 184 கடலட்டைகள் மற்றும் 22 சங்கு ஓடுகள் ஆகியன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 முதல் 58 வயதுக்குட்பட்ட முல்லைத்தீவு, புத்தளம், கல்பிட்டி,கொட்டாந்தீவு, தோப்பூர் மற்றும் முள்ளியான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனக் கடற்படை தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு உதவி கடற்றொழில் பணிப்பாளர் அலுவலகம், புத்தளம் கடற்றொழில் , நீரியல் வளத்துறை உதவி அலுவலகம்,மூதூர் கடற்றொழில் பரிசோதகர் இயாழ்ப்பாணம் கடற்றொழில் , நீரியல் வள திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.