அமெரிக்காவில் அதிகரிக்கும் அம்மை நோய்!

0
9

அமெரிக்காவின் மெக்சிகோ மற்றும் டெக்சாஸ் மாகாணங்களில் அம்மை நோய் பரவல் அதிகரித்துள்ளது.
இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர்களில் பெரும்பாலானோர் 17 வயதுக்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தட்டம்மை தடுப்பூசியை எடுத்துக்கொள்ள மறுத்தமையே நோய் பரவுவதற்கு காரணமென அந்நாட்டு அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.