அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு GOLD CARD – விலை 5 மில்லியன் அமெரிக்க டொலர்!

0
36

அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘GOLD CARD’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன்படி 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொடுத்து அதனைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் சட்டவிரோதமாகக் குடியேறிய பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை நாடு கடத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்தநிலையில் அமெரிக்காவில் குடியேறியவர்களுக்காக ‘GOLD CARD’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொடுத்து அதனைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.