மித்தெனிய முக்கொலை – கைது செய்யப்பட்ட மூவருக்கும் 90 நாட்கள் தடுப்பு காவல்!

0
30

மித்தெனிய முக்கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 18 ஆம் திகதி இரவு மித்தெனியாவின் கல்பொத்தயாய பகுதியில் தந்தைஇ மகன் மற்றும் மகள் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.