காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை ஆகிய நீர்ப்பகுதிகளில் இன்று (27) காலை முதல் மழை பெய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில நாட்களாக இந்த பகுதிகளில் கடும் வறட்சியான காலநிலை நிலவியது.
மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 24 அடி குறைவாகவும் , காசல்ரீ நீர்த்தேக்கம் 21 அடியிலிருந்து குறைந்துள்ளதாகவும் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால், மத்திய மலையின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் குடிநீர் பிரச்சினை நிலவியுள்ளது.