முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தோட்டாக்கள், கைக்குண்டுகள் மீட்பு!

0
10

கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் வீட்டு வளாகத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான துப்பாக்கிகளுக்கான 341 தோட்டாக்கள் மற்றும் இரண்டு கைக்குண்டுகளை கலேன்பிந்துனுவெவ பொலிஸார் மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட பொருட்களில் 281 T-56 தோட்டாக்கள், ஐந்து மகசின்கள், SLR வகை தோட்டாக்கள், 06 84s வகை தோட்டாக்கள், 07 84s பயிற்சி தோட்டாக்கள், 03 6 மி.மி பிஸ்டல் தோட்டாக்கள், 1 SMG மகசின் மற்றும் நான்கு கைக்குண்டுகள் ஆகியவை அடங்கும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆயுதங்கள் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (02) பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது குறித்த பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த வீட்டில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் தனது குடும்பத்துடன் வீட்டில் வசித்து வந்துள்ளதுடன் அவர் 2022 ஆம் ஆண்டு பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.