இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரானது எதிர்வரும் மே 25 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதன்படி தொடரின் முதலாவது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ரோயல் செலேஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.
இந்தநிலையில் இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும் போட்டிகளுக்கு பிறகான நேரங்களில் கைகளில்லாத சட்டைகளை அணிய ஐபிஎல் நிர்வாகம் தடை விதிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய இதனை மீறும் வீரர்களுக்கு முதலில் எச்சரிக்கையும், பின்னர் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.