அநுராதபுரத்தில் வாகன விபத்து – ஒருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!

0
9

வாகன விபத்தொன்றின் காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

கல்நேவ முதல் அநுராதபுரம் வரையில் பயணம் செய்யத் தனியார் பேருந்து ஒன்றும் அந்த திசை நோக்கி தந்தையும், மகளும் பயணம் செய்த உந்துருளியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுரம், பண்டுலகமவில் அமைந்துள்ள அரச உயர் தொழிநுட்பக்கல்வி நிறுவனத்தில் கற்கும் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் எப்பாவல, கிரலோகம, கெடதிவுல பிரதேசத்தில் உள்ளவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் உயர் தொழிநுட்ப கல்வி நிறுவனத்திற்குத் தனது தந்தையுடன் உந்துருளியில் பயணம் செய்யும் போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. ஷ்ராவஸ்திபுர, ஐந்தாம் ஓடை சந்தியிலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தலாவயிலிருந்து அநுராதபுரம் நோக்கி தந்தையும் மகளும் பயணம் செய்த உந்துருளி அந்த திசை நோக்கி பின்னால் தனியார் பேருந்து ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த பெண் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.சம்பவம் தொடர்பில் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.