அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் ஆயுதங்களுடன் நடமாடிய நபரொருவர் மீது அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனாட் ட்ரம்ப்பைத் தாக்கத் திட்டமிட்டுக் குறித்த நபர் அங்குச் சுற்றித் திரிந்தாரா என்ற கோணத்தில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் துப்பாக்கிச்சூடு நடந்தபோது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.