பாகிஸ்தானில் பயங்கரவாதிகளால் தொடருந்திலிருந்து கடத்தப்பட்டிருந்த பயணிகளில் இதுவரை 155 பேர் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 27 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானின் குவெட்டாவிலிருந்து பெஷாவருக்கு நேற்று (11) புறப்பட்ட தொடருந்தைப் பயங்கரவாதிகள் சிறைபிடித்தனர். இதில் பயணம் செய்த 30 பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 500 ற்கும் மேற்பட்ட பயணிகள், பணயக் கைதிகளாகத் தடுத்துவைக்கப்பட்டனர்.
பணய கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள பயணிகளைச் சுற்றி தற்கொலை குண்டு தாரிகளும் இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.