நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள பட்டலந்த அறிக்கை!

0
4

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை இன்று (14) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையை இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் சமீபத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.