டென்வெர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து டல்லாஸ் ஃபோர்ட் வொர்த் நோக்கி, 178 பயணிகளுடன் புறப்பட்ட அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
விமானத்தின் இயந்திர கோளாறு காரணமாக இத்தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்தின் போது 172 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் விமானத்திலிருந்ததாகவும், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலையத்தில் உள்ள தீயணைப்பு படையினர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.