குர்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய நகரை கைப்பற்றியது ரஷ்யா!

0
4

குர்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள மிகப் பெரிய நகரமான சுட்ஸா நகரத்தை கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.அதன்படி, சுட்ஸா நகரத்தின் முழு கட்டுப்பாட்டையும் ரஷ்ய இராணுவம் மீட்டெடுத்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் நேற்றையதினம் அறிவித்தது. கடந்த ஆண்டு குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் ஊடுருவி பல நகரங்களை கைப்பற்றியது.

உக்ரைனிடம் இழந்த பகுதிகளை மீட்டெடுக்க ரஷ்யாவின் இராணுவ படையினர் கடுமையாகப் போரிட்டு வந்தனர். இதேவேளை குர்ஸ்க் பகுதியில் ரஷ்ய ஜனாதிபதி புடின் இராணுவ உடையில் சென்று இராணுவ வீரர்களை சந்தித்து கலந்துரையாடியதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.