மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுரஸில் சிறிய வணிக விமானமொன்று கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். கரீபியன் தீவுக்கூட்டத்தில் உள்ள ரோட்டன் தீவிலிருந்து லா சீபாவின் பகுதிக்குச் செல்லும் வழியில் லான்சா ஏர்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான குறித்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கடலில் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விமானத்தில் 17 பேர் பயணித்துள்ளதாகவும், அவர்களில் 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் பிரபல கரிஃபுனா இசைக் கலைஞர் ஆரேலியோ மார்டினெஸும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.