மாத்தளை – இரத்தோட்டையில் பெண்ணொருவர் கொலை

0
47

மாத்தளை இரத்தோட்டைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை (22) பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 

இரத்தோட்டை, கைகாவல இசுருகம பகுதியில் இடம் பெற்ற மேற்படி சம்பவத்தில்  கணவன் தனது மனைவியை வெட்டிக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய கணவன், மனைவி இருவரும் மாத்தளை வைத்தியசாலையின் கனிஷ்ட ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

11 வயதுடைய மகள் மற்றும் 13 வயதுடைய மகன் என  இவர்களுக்கு இரு பிள்ளைகள் இருப்பதாகவும்  தெரியவந்துள்ளது.

கொலையை அடுத்து தலை மறைவாகவிருந்த சந்தேகநபரான கணவரை இரத்தோட்டைப் பொலிஸார் கைது  செய்துள்ளனர்.  

சம்பவம் தொடர்பில்  இரத்தோட்டைப்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.