உக்ரைனுக்கான பிரித்தானிய பிரதமரின் திட்டத்தை நிராகரித்த அமெரிக்கா

0
30

உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு ஒத்துழைக்கவென சர்வதேச படையை உருவாக்கும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமரின் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் விஷேட பிரதிநிதி ஸ்டெவ் விட்கொப் நிராகரித்துள்ளார்.

‘நாம் அனைவரும் வின்ஸ்டன் சர்ச்சிலைப் போன்று இருக்க வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமரும் பிற ஐரோப்பிய தலைவர்களும் நினைப்பதன் எளிமையான கருத்தை அடிப்படையாகக் கொண்டதே இத்திட்டம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா முன்னெடுக்கும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு ஸ்டெவ் விட்கொப் தலைமை தாங்குவதும் குறிப்பிடத்தக்கது.