பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை ஏப்ரல் 8 அல்லது 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.