ஐ.பி.எல். 2025 : கொல்கத்தா – ராஜஸ்தான் இன்று பலப்பரீட்சை

0
31

ஐ.பி.எல் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு கவுகாத்தியில் நடைபெற உள்ள 6 ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் முன்னாள் சம்பியன் ராஜஸ்தான் ரோயல்ள் அணிகள் மோதுகின்றன.

இவ்விரு அணிகளும் தங்களது முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவியுள்ளன. அதன்படி நடப்பு சம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதலாவது லீக்கில் பெங்களூர்க்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மறுபுறம் முன்னாள் சம்பியன் ஆன ராஜஸ்தான் ரோயல்ஸ், தனது முதல் லீக்கில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியிடம் பணிந்தது.

இதனால் இந்த ஆட்டத்தின் மூலம் வெற்றி கணக்கை தொடங்க போவது யார்? என்ற எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே எழுந்துள்ளது.