2019 பௌத்த மதகுருமார்கள் தையிட்டிக்கு வந்து பழைய ஆலயம் அமைந்திருந்த பகுதிகளை சுற்றியிருந்த நிலங்களில் புதிய கட்டிடமொன்றை கட்ட ஆரம்பித்தனர்- தமிழ் மக்கள் தங்களின் நிலங்களையே கேட்கின்றனர்!!! – நான் அவர்கள் பக்கம்-நாகதீபவிகாராதிபதி

0
15

தமிழ் மக்கள் இங்கே தவறிழைக்கவில்லை.அவர்கள் அப்பாவிகள்:அவர்கள் தங்கள் நிலங்களை மாத்திரம் கேட்கின்றனர்.நான் அவர்களின் பக்கம் ” என்கின்றார் நாகதீப விகாரையின் தலைமை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர்

தையிட்டி யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் போராட்டம் குறித்தே அவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

தையிட்டி நாகதீப ஆலயத்திற்கு சொந்தமான  ஒன்றரை ஏக்கர் நிலத்தில் ஆலயமொன்று காணப்பட்டது என தெரிவிக்கும் அவர் 1958 இல் பதற்றநிலை உருவானதை தொடர்ந்து அந்த ஆலயம் கைவிடப்பட்டது ஆனால் நிலம் தொடர்ந்தும் ஆக்கிரமிக்கப்படாமல் இருந்தது  என அவர் குறிப்பிடுகின்றார்.

‘பல வருடங்கள் யுத்தம் இடம்பெற்ற போதும்,தமிழ் மக்கள் அந்த நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை, என அந்த பௌத்தமதகுரு சண்டே மோர்னிங்கிற்கு தெரிவித்தார்.

எனினும் 2019 இல் புதிய பௌத்த மதகுருமார்கள் அங்கு வந்து  பழைய ஆலயம் அமைந்திருந்த பகுதிகளை சுற்றியிருந்த நிலங்களில் பௌத்தமதகுருமார்களிற்கான புதிய கட்டிடமொன்றை கட்ட ஆரம்பித்தனர் என அவர் தெரிவித்தார்.

எங்களிற்கு சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தை அவர்கள் தொடர்வில்லை,ஆனால் அவர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்வதற்காக பழைய ஆலயத்தின் பெயரை பயன்படுத்தியுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

இதற்கு இலங்கை இராணுவத்தினர் ஆதரவளித்தனர்,மக்களின் நிலங்களில் இந்த கட்டுமானங்களை கட்டுவதற்கு பிரதானமாக ஆதரவளித்தவர்கள் இராணுவத்தினரே என அவர்  குறிப்பிடுகின்றார்.

அவர்கள் இதனை ஆரம்பித்தபோது இதனை நிறுத்துங்கள் என பொதுமக்கள் பிரதிநிதிகளிடம் தெரிவித்தேன்,, ஒருநாள்பிரச்சினை வரும் என எச்சரித்தேன். அவர்கள் இது கட்டப்படும் வரை காத்திருந்துவிட்டு எதிர்ப்பை ஆரம்பித்தனர்,நான் ஆரம்பத்திலிருந்து தையிட்டி விகாரைக்கு எதிராக உள்ளேன்.

அங்கு முன்னர் இராணுவமுகாம் இருந்தது,இந்த மதகுருமார்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை,நான் மாத்திரமே அந்த பகுதியை சேர்ந்தவன்,அவர்களை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர் இது ஒரு வியாபாரம். இலங்கை மின்சாரசபை எப்படி உறுதியில்லாத புதிய கட்;டிடங்களிற்கு மின்சாரத்தை வழங்குகின்றது,இராணுவத்தின் அதிகாரத்தை பயன்படுத்தியே மின்சாரத்தை பெற்றுள்ளனர் என நாகதீப விகாரையின் தலைமை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர்தெரிவித்தார்.

சண்டே மோர்னிங்கிற்கு கருத்து தெரிவித்த புதிய விகாரை கட்டப்பட்டுள்ள காணி உரிமையாளர்களில் ஒருவரான சாருஜன்,தங்கள் காணிக்கு பக்கத்தில் 1940 முதல் சிறிய பௌத்த ஆலயம் காணப்பட்டதை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம் என தெரிவித்தார்.

‘இங்கிருந்த கருவா தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த சிங்களவர்கள் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்,ஆனால் புதிய ஆலயம் எங்களிற்கு சொந்தமான – தனியார் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது ,1986 இல் நாங்கள் காணியை விட்டுவிட்டு இங்கிருந்து யாழ்ப்பாணம் சென்றோம்,யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர் 2015 இல் நாங்கள் இங்கு மீண்டும் வந்தோம்,இராணுவத்தினர் நிலங்களை ஆக்கிரமித்திருந்தனர்” என அவர் தெரிவித்தார்.

நாங்கள் உண்மை நிலவரத்தை அறிவதற்கு கொவிட் 19 தடையாகயிருந்தது,இங்கு சட்டவிரோத கட்டுமானம் இடம்பெறுவதை எங்களால் அறிய முடியாமல் போய்விட்டது ஆர்ப்பாட்டத்திலும்ஈடுபட முடியவில்லை என மற்றுமொரு காணி உரிமையாளரான மலியதலன் தெரிவித்தார்.

இந்த காணிஉரிமையை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன,இந்த நிலம் ஆலயத்திற்கு சொந்தமானது என்றால் இராணுவத்தை உறுதியை காண்பிக்க சொல்லுங்கள் என்றார் அவர்.

சமீபத்தில் காணி உரிமையாளர்கள் சிலர் காணி உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் அரசாங்க அமைச்சரை கடந்த வாரம் சந்தித்தனர்.

செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த பார்ள் அமைப்பின் உறுப்பினரும் யாழ் பல்கலைகழக விரிவுரையாளருமான மகேந்திரன் திருவரங்கன்,தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேசிய நல்லிணக்கம், இனமத கலாச்சார அடிப்படையில் பாரபட்சமின்மை போன்ற வாக்குறுதிகளின் அடிப்படையில் ஆட்சிக்கு வந்ததால் அந்த அரசாங்கம் மக்களின் நிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அந்த நிலம் மக்களுடையது,அவர்களிடம் உறுதி உள்ளது,காணியின் உண்மையான சொந்தக்காரர்களிற்கு நிலங்களை கையளிப்பதன் மூலம் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும்.மக்கள் தாங்கள் சிங்களவர்களிற்கோ அல்லது பௌத்தத்திற்கோ எதிரானவர்கள் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர்,அவர்கள் தங்கள் நிலங்களை கோருகின்றனர் என  அவர் தெரிவித்தார்.

தையிட்டி மாத்திரம் வடக்குகிழக்கில் காணி உரிமைக்காக இடம்பெறும் போராட்டம் இல்லை,தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் , வனவளங்களை பாதுகாக்கின்றோம் என்ற போர்வையில்,இராணுவத்தினரும்,தொல்பொருள் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகாரசபை போன்ற அரசாங்க அமைப்புகளும் மக்களின் நிலங்களை பறித்துவருகின்றன என அவர் தெரிவித்தார்.

இவை அனைத்தும் இராணுவத்தினரின் உதவியுடன் இடம்பெறுகின்றது,அரசாங்கத்தின் உதவியுடன் இடம்பெறும் மேலாதிக்க நில அபகரிப்புகள் காரணமாக தமிழ் மக்கள் தங்கள் நிலங்களை இழந்துள்ளனர்,ஆகவே இந்த பிரச்சினைக்கு தீர்வை காணவேண்டிய நிலங்களை இழந்தவர்களிற்கு நீதியை வழங்கவேண்டியபொறுப்பு புதிய அரசாங்கத்திற்குள்ளது என அவர் தெரிவித்தார்.

பெப்ரவரி மாதம் இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டிய தமிழ்தேசியமக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் இராணுவம் தொடர்ச்சியாக கிளர்ச்சி எதிர்ப்பு முறையில் செயற்படுகின்றது என குற்றம்சாட்டியதுடன்,இராணுவம் தன்னை தமிழ் மக்களின் நலன்கள் தமிழ் மக்களிற்கு எதிரான ஒரு தரப்பாக மாற்றியுள்ளது என்றார்.