செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் வாரம் இரு நாட்கள் மட்டுமே வேலை நாட்கள் என்கிற நடைமுறை இன்னும் பத்தாண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு துறைகளிலும் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் உருவாகக்கூடும். இதனாலேயே வேலைநாட்களும் குறையும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியே காரணம் என்று சொல்லியிருக்கிறார் அவர்.
பல துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கோலோச்ச தொடங்கிவிட்டது. இப்போது இணையத்தில் பிரபலமாகி வரும், ‘ஜிப்லி’ வகை கார்ட்டூன் சித்திர படங்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியின் விளைவே.
தொழில்நுட்பத்தை நம்பியே சுழலும் இந்த நவீன யுகத்தில், அடுத்த 10 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு குறைந்துவிடும் என்பதையே பிரதிபலிக்கிறது பில் கேட்ஸின் கருத்து.