ஹவுதிகள் மீது அமெரிக்க படை தாக்குதல் : காணொளி வெளியீடு!

0
22

ஏமனில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீதான அமெரிக்க தாக்குதலின் காணொளியை அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.

எக்ஸ் வலைத்தளத்தில் அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், சுற்றி நிற்கும் ஒரு மக்கள் குழுவின் மீது ட்ரோன் மூலம் குண்டு வீசப்பட்டு அவர்கள் கொல்லப்படுவதும் பின்னர் அப்பகுதி முழுவது புகை பரவியதும் பதிவாகியுள்ளது.

இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஹவுதி படையினர் எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், அவர்கள் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தும் கட்டளைகளுக்காக அங்கு கூடியிருந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும் ஹவுதிகளினால் நமது கப்பல்கள் மீது எந்தவொரு தாக்குதலும் இருக்காது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலை எதிர்த்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க வணிக மற்றும் இராணுவ கப்பல்கள் மீது ஹவுதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த வாரம் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஏராளமான ஏமன் மக்கள் கொல்லப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சிப் படை குற்றம்சாட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.