அமெரிக்காவை விமர்சித்து ஸெலன்ஸ்கி கருத்து தெரிவிப்பு!

0
31

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் அமெரிக்கா முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன. விரைவில் இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷ்யா நேற்று (5) சரமாரி ட்ரோன் தாக்குதல் நடத்தியது. ஸெலன்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவ்வி ரிக் பகுதியில் நடந்த தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர்.  இதேவேளை ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்ட உக்ரைனுக்கான   அமெரிக்க தூதர் பிரட்கெட் பிரிங், விளையாட்டு மைதானம், உணவகத்தில் நடந்த ஏவுகணை தாக்குதல் கொடூரமானது. இதற்காகவே போர் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், துரதிர்ஷ்டவசமாக அமெரிக்காவின் விமர்சனம் என்பது விரும்பத்தகாத ஆச்சர்யமாக உள்ளது. எத்தகைய வலிமையான நாடு, எத்தகைய வலிமையான மக்கள். ஆனால், பலவீனமான விமர்சனம் செய்கிறது. ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உயிரிழந்தால் கூட ரஷ்யா என்ற பெயரை உச்சரிக்கவே பயப்படுகின்றனர் என தெரிவித்தார்.