2024 ஜனாதிபதி தேர்தலின் போது கோல்ப் திடலில் டொனால்ட் டிரம்பினை கொலை செய்ய திட்டமிட்டார் என குற்றம்சாட்டப்பட்டுள்ள ரையன் ரூத் டிரம்பின் விமானத்தை சுட்டுக்கொல்வதற்காக ஆயுதங்களை கொள்வனவு செய்ய முயன்றார் என அமெரிக்க வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆயுதங்களுடன் தொடர்புள்ள உக்ரைனியர் ஒருவரிடமிருந்து ரூத் விமான எதிர்ப்பு ஆயுதங்களை கடந்த ஆகஸ்டில் கொள்வனவு செய்ய முயன்றார் என அமெரிக்க வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
எனக்கு ஆர்பிஜியை அல்லது ஸ்டிங்கரை அனுப்புங்கள் நான் என்ன செய்ய முடியும் என பார்க்கின்றேன் என ரூத் தனது நண்பரிடம் தெரிவித்திருந்தார் என அவர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
டிரம்ப் மீண்டும் தெரிவு செய்யப்படாத நிலையை உறுதி செய்வதற்கு எனக்கு சாதனங்கள் தேவை என அவர் குறிப்பிட்டார் என அமெரிக்க அரசாங்க வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே மாதம் ரூத் 50கலிபர் துப்பாக்கியை கொள்வனவு செய்ய முயன்றார்,அவர் தன்வசம் வைத்திருந்த ஆயுதத்தை விட இது இன்னமும் ஆபத்தானதாக விளங்கியிருக்கும்,என தெரிவித்துள்ள அதிகாரிகள் துப்பாக்கி கண்காட்சியொன்றில் அவர் 50 கலிபர் துப்பாக்கியை கொள்வனவு செய்ய முயன்றார் எனினும் அவரின் நண்பரால் அந்த துப்பாக்கியை பெற்றுக்கொடுக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெஸ்ட்பாம்பீச்சில் உள்ள கோல்ப் திடலில் டிரம்ப் கோல்ப் விளையாட்டில் ஈடுபட்டிருந்தவேளை அங்கு மறைத்திருந்த ரூம் கைதுசெய்யப்பட்டார்.
அமெரிக்க இரகசிய சேவை பிரிவினர் புதருக்குள் அவரின் துப்பாக்கியை கண்டு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் பதிலுக்கு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளாத அவர் தனது காரில் தப்பியோடிய வேளை கைதுசெய்யப்பட்டார்……….