யாழ்ப்பாணம் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கான தேசிய மக்கள் சக்தியின் பிரசார கூட்டம் மானிப்பாய் சுதுமலை பகுதியில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, யாழ் மாநகர சபை முதல்வர் வேட்பாளர் எஸ்.கபிலன், கட்சி அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அமைச்சர் விஜித ஹேரத் தமிழ் மொழியில் உரையாற்றி இருந்ததமை குறிப்பிடத்தக்கது.