மாத்தறை சிறைச்சாலையிலிருந்த கைதிகள் அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு இடமாற்றம்

0
8

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, சுமார் 200 கைதிகள் அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதில் 26 பெண் கைதிகளும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்கனவே 506 கைதிகள் உள்ளதாகவும் அதில் தற்போது ஒரு குழு இன்று அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 3 கைதிகளை வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு முற்பட்டபோது அவர்களுடன் தங்கியிருந்தவர்கள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், நேற்றிரவு அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

குறித்த அமைதியின்மை சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.