டைட்டானிக் பயணி ஒருவர் எழுதிய கடிதம் 400,000 அமெரிக்க டொலருக்கு விற்பனை

0
12

டைட்டானிக் கப்பல் மூழ்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாகஇ டைட்டானிக் பயணி ஒருவர் எழுதிய கடிதம் இங்கிலாந்தில் நடந்த ஏலத்தில் 400,000 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகியுள்ளது.

கர்னல் ஆர்ச்சிபால்ட் கிரேசியினால் எழுதப்பட்ட குறித்த கடிதம் எதிர்பார்க்கப்பட்டதை விட 5 மடங்கு அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.

இது சவுத்தாம்ப்டனில் வைத்து கர்னல் ஆர்ச்சிபால்ட் கிரேசி, கப்பலில் ஏறிய நாளான 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் திகதி எழுதப்பட்ட கடிதமாகும்.