நாளை பிரமாண்டமான அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளேன் – டொனால் ட்ரம்ப்!

0
10

மிகவும் மதிக்கப்படும் பெரிய நாடொன்றின் முக்கிய பிரதிநிதிகளுடன்  மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் குறித்த செய்தி மாநாடொன்றை, நாளை காலை 10:00 மணிக்கு, ஓவல் அலுவலகத்தில் தான் நடாத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இன்று அறிவித்துள்ளார்.

அடுத்த வாரம் டுபாய் (UAE) உட்பட மத்தியகிழக்கு நாடுகளுக்கு பயணிக்கவுள்ள ட்ரம்ப், நாளை விடுக்கவுள்ள அறிவிப்பு பற்றி கடந்த ஒரு வாரமாக பரபரப்பாக பேசி வருகிறார்.

எனினும் பிரித்தானியா மற்றும முஸ்லிம் நாடொன்றுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை அவர் கைச்சாத்திடவுள்ளதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன.