முறையற்ற வெளிநாட்டுக் கொள்கையே ஐ.நாவில் பிரேரணை நிறைவேறக் காரணம் – சம்பிக்க

0
307

அரசாங்கத்தின் முறையற்ற வெளிநாட்டுக் கொள்கையே ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கான காரணமாகும். முறையான இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்திருந்தால் பிரேரணையை தோல்வியடையச் செய்திருக்க முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இவ்வாறு பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும் என்பதோடு , பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா மற்றும் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் தொடர்பில் காணப்படும் பயணத்தடை மேலும் நீடிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.