யுவன் குரலில் ஒலிக்கும் ‘பறந்து போ’ பட பாடல்

0
9

இரசிகர்களிடத்திலும்,  திரையுலகினரிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இயக்குநரும், நடிகருமான ராம் இயக்கத்தில் உருவான ‘ பறந்து போ ‘ எனும் திரைப்படத்திற்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதிய பாடலும்,  பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

சந்தோஷ் தயாநிதி இசையில் உருவாகி இருக்கும் ‘ கஷ்டம் முன்ன வந்தா வந்தா.. டிஷ்யூம் இந்தா இந்தா..’ என தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இந்தப் பாடலை பாடலாசிரியர் மதன் காக்கி எழுதியிருக்க இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான யுவன் சங்கர் ராஜா தன்னுடைய வசீகரிக்கும் வெண்கல குரலில் இந்தப் பாடலை பாடியிருக்கிறார். இந்தப் பாடல் குழந்தைகளுக்கான ரைம்ஸ் பாணியில் இருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

எதிர்வரும் ஜூலை மாதம் நான்காம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, கிரேஸ் அண்டனி, மாஸ்டர் மிதுல் ரயான் , அஞ்சலி,  அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

தேசிய விருது பெற்ற படைப்பாளியான ராம் – இயல்பான நடிப்பிற்கு பெயர் பெற்ற அகில உலக சுப்பர் ஸ்டார் நடிகர் சிவா ஆகியோர் கூட்டணி அமைத்திருப்பதால்..  மாயஜாலம் நிகழும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.