பாகிஸ்தானின் அடுக்குமாடி இடிந்து வீழ்ந்ததில் 27 பேர் பலி!

0
5

பாகிஸ்தானின் கராச்சியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியொன்று இடிந்து வீழ்ந்ததில், 27 பேர் உயிரிழந்தனர்.
 
குறித்த குடியிருப்புத் தொகுதியில், 40 இற்கும் மேற்பட்டோர் வசித்து வந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
 
இந்தநிலையில், இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.