பாடசாலைகளுக்கு ரூ.5,000 வரம்பற்ற டேட்டா பக்கேஜ்கள்!

0
9

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கையில் உள்ள அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் இணைய அணுகலை வழங்க எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார்.

இதற்காக பாடசாலைகளுக்கு ரூ.5,000 வரம்பற்ற டேட்டா பக்கேஜ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் அமரசூரிய தெரிவித்தார். 

சுமார் 1,000 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட்போர்டுகள் மற்றும் பிற கணினி உபகரணங்களை வழங்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். 

1,500 பாடசாலைகளுக்கு 1,900 ஸ்மார்ட் போர்டுகள் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

க்ளீன் ஸ்ரீலங்கா’ முயற்சியின் கீழ் இலங்கை விமானப்படையின் ஆதரவுடன் ஒரு தேசிய கல்வி முகாமைத்துவ அமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.