“அத்தையை திருமணம் செய்துகொள்”: மருமகனை கொடூரமாக தாக்கிய மாமா!

0
11

அத்தையை திருமணம் செய்துகொள் என வற்புறுத்திய மாமா, மருமகனை கொடூரமாக தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பீகார் மாநிலம், சுபவுல் மாவட்டத்தின் ஜீவ்சாபூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவ்சந்திர முகியா. இவரது மனைவி ரீட்டா தேவி. இந்தத் தம்பதிக்கு நான்கு வயதில் ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில், ரீட்டா தேவிக்கு உறவினரான இளைஞர் மிதிலேஷ் குமார் முகியாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. உறவு முறையில், ரீட்டா தேவி மிதிலேஷ் குமாருக்கு அத்தை முறை எனக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், ரீட்டா தேவிக்கும் மிதிலேஷ் குமாருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்து, அது திருமணத்தை மீறிய உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதனால், இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

ஒரு கட்டத்தில், இந்த விவகாரம் சிவ்சந்திர முகியாவுக்குத் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவர் தனது மனைவி ரீட்டா தேவியைக் கண்டித்தார். ஆனால், அதன்பின்னரும் இருவரும் உறவைத் தொடர்ந்ததனர்.

ஆத்திரமடைந்த சிவ்சந்திர, மிதிலேஷ் குமாரை தனது வீட்டிற்கு ஜூலை 2 அன்று அழைத்து வந்து, உறவினர்கள் சிலருடன் சேர்ந்து கடுமையாகத் தாக்கியுள்ளார். கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்கள் சரமாரியாக அடித்ததால், மிதிலேஷ் வலியால் கதறித் துடித்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மிதிலேஷின் பெற்றோர், தாக்குதலைத் தடுக்க முயன்றபோது, அவர்களையும் அந்தக் கும்பல் கடுமையாகத் தாக்கியது. பின்னர், சிவ்சந்திர, தனது மனைவி ரீட்டா தேவியை மிதிலேஷ் குமாரைத் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார்.

மேலும், திருமணத்திற்கு அடையாளமாக, மிதிலேஷை ரீட்டா தேவியின் நெற்றியில் குங்குமம் இடுமாறு கட்டாயப்படுத்தி, அவரைத் தாக்கியுள்ளார். இதனால், வலியைத் தாங்க முடியாத மிதிலேஷ், ரீட்டா தேவியின் நெற்றியில் குங்குமம் இட்டார்.

இதற்கிடையே, தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களைக் கண்டதும், சிவ்சந்திர மற்றும் அவரது கூட்டாளிகள் தப்பியோடினர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் மிதிலேஷையும் ரீட்டா தேவியையும் மீட்டு, மிதிலேஷை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து, மிதிலேஷின் தந்தை ராம்சந்திர முகியா அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய சிவ்சந்திர முகியா உள்ளிட்ட கூட்டாளிகளைத் தேடி வருகின்றனர்.

திருமணத்தை மீறிய உறவில் இருந்ததற்காக சொந்த அத்தையை திருமணம் செய்துகொள்ளுமாறு இளைஞர் தாக்கப்பட்ட சம்பம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.