மாலைதீவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

0
6

பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலைதீவு தலைநகர் மாலேவுக்கு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கேரளாவில் இருந்து 700 கிலோ மீற்றர் தொலைவில் மாலைதீவு அமைந்துள்ளது. அந்த நாட்டின் 60 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இதற்காக பிரதமர் மோடி நேற்று சிறப்பு விமானத்தில் மாலைதீவில் வேலனா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினார்.

மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சு விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று பிரதமர் மோடியை வரவேற்றார். விமான நிலையத்தில் ஏராளமான இந்தியர்கள் திரண்டு வந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து மாலைதீவு தலைநகர் மாலேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். சுதந்திர தின சதுக்கத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.