இன்றைய வானிலை!

0
10
Transparent umbrella under heavy rain against water drops splash background. Rainy weather concept.

சப்ரகமுவ, மேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே இலேசான மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்.

நீர்கொழும்பு தொடக்கம் காலி ஊடாக மாத்தறை  வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 km வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.

மாத்தறை தொடக்கம்  ஹம்பாந்தோட்டை ஊடாக அக்கரைப்பற்று வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 55 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் வீசும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 

கல்பிட்டி தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.